• Social Media Links
  • Site Map
  • Accessibility Links
  • English
Close

பேருந்து நேரம் மற்றும் தகவல்கள்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சேலம் சார்பாக, 23.05.2025 முதல் 29.05.2025 வரை நடைபெறும் 48 வது ஏற்காடு கோடை விழாவை காண வரும் பயணிகள் அனைவரையும் வருக வருக என வரவேற்கின்றோம். ஏற்காட்டிற்கு தினசரி இயக்கப்பட்டு வரும் பேருந்துகளுடன், சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதுடன், காலை 8.00 மணி மற்றும் 8.30 மணிக்கு சேலத்திலிருந்து பேக்கேஜ் (Package) பேருந்து புறப்பட்டு ஏற்காட்டில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களான

1) கரடியூர் காட்சி முனை

2) சேர்வராயன் கோவில்

3) மஞ்சக்குட்டை காட்சி முனை

4) பக்கோடா பாயிண்ட்

5) லேடீஸ் சீட்

6) ஜென்ஸ் சீட்

7) ரோஸ் கார்டன்

8) ஏற்காடு ஏரி

9) அண்ணா பூங்கா

10) மான் பூங்கா

11) தாவரவியல் தோட்டம்

ஆகிய இடங்களை கண்டு மகிழ்வதற்கு சிறப்பு பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இச் சிறப்பு பேருந்து கட்டணம் ரூ 300 /- ஆகும். இவ்வசதியை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என அன்புடன் தெரிவித்து கொள்ளப்படுகிறது. இனிய பயணம் தொடங்க நல்வாழ்த்துக்கள்.

காலை 5.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்பதனை தெரிவித்து கொள்ளப்படுகிறது.