எப்படி அடைவது
சேலம் வந்து சேரும் பயண வழி:
வான்வழி: திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து சேலம் 135 கி.மீ. தொலைவில் உள்ளது. கோயம்புத்தூர் விமான நிலையம் 150 கி.மீ தொலைவில் உள்ளது.
இரயில் வழி: சேலத்திலேயே இரயில் சந்திப்பு உள்ளது. மற்றும் இது கோட்ட தலைமையிடமாகும். 842 கி.மீ நீளமுள்ள இருப்பு பாதையை கொண்டுள்ளது சேலம் கோட்டம். தென்னிந்தியாவில் உள்ள முக்கியமான சந்திப்புகளில் ஒன்றாகும்.
சாலை வழி: தேசிய நெடுஞ்சாலைகள் 7, 47 மற்றும் 68 ஆகியவை சந்திக்கும் இடமாகும். இரண்டு பெரிய பேருந்து நிலையங்களை கொண்டதாகும். டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலைத்திலிருந்த வெளியூர் பேருந்துகளும், பழைய பேருந்து நிலையத்திலிருந்து நகர பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.