Close

மாவட்டம் பற்றி

மலைகள், குன்றுகள் மற்றும் பல்வகை நிலபகுதிகளால் சூழப்பட்ட சேலம் மாவட்டம் ஒரு நிலவியல் சொர்கமாக திகழ்கிறது. ஒரு மாவட்டம் என்ற அளவில் சேலம் பல வகைகளில் தனித்தன்மையுடையதாக விளங்குகிறது. கஞ்சமலை பகுதியில் கிடைக்கும் இரும்பு தாது சேலம் இரும்பாலை திட்டத்திற்கு வழிவகுத்தது. தற்போது சேலம் இரும்பாலை மூலம் பெரிய வார்ப்பிரும்பு பாலங்களிருந்து தேவையான வடிவங்களில் இரும்பு தகடுகள் தயாரிக்கப்படுகிறது. சேலத்து மாம்பழங்களின் இனிப்பு எல்லோராலும் மிகவும் விரும்பப்படுகிறது. குறிப்பாக மல்கோவா மாம்பழங்கள் சேலத்தின் பெருமை எனப் போற்றப்படுகிறது. தேங்காய் நார் கயிறு தயாரித்தல், வெள்ளி கொலுசு மற்றும் பாத்திரங்கள் தயாரித்தல், ஜவுளி மற்றும் பட்டு நெசவு போன்ற தொழிகள் சேலம் மாவட்டத்தில் அதிக அளவு மேற்கொள்ளப்படுகிறது. ஏற்காடு கோடை வாசஸ்தலம் பல அழகிய காட்சித்தலங்களுடன் அதிக செலவில்லாத பொழுது போக்கு இடமாக விளங்குகிறது. இது ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படுகிறது.

பொது:
மாவட்டம் : சேலம் தலையகம் : சேலம் மாநிலம் : தமிழ்நாடு
பரப்பளவு:
மொத்தம்: 5237 ச.கி.மீ ஊரகம் : 4564.41 ச.கி.மீ நகர்புறம் : 675.69 ச.கி.மீ
மக்கள்தொகை:
மொத்தம் : 34,82 lakhs ஆண்கள்: 17,81,571 பெண்கள்: 17,00,485
தொகுதிகள்:
சட்டமன்ற தொகுதிகள் : 11 பாரளுமன்ற தொகுதி : 1