கல்வித் துறை
பள்ளிக் கல்வித் துறை – சேலம் மாவட்டம்
கல்வி என்பது மனிதனை அனைத்து உயிரினங்களைவிட உயா்வான நிலையில் உருவாக்கும் கருவி ஆகும். கல்வி ஒரு சமூகத்தின் ஒருங்கிணைந்த அறிவு, திறன் மற்றும் மதிப்பீடுகளை ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு கொண்டு செல்ல உதவும் ஒரு காரணி, கல்வி குழந்தைகளை சுயமாக சிந்திக்கவும், புதியனவற்றை உருவாக்கவும், கற்பனைத் திறனை வளா்க்கவும், கலைநயம் மிக்க சிந்தனைத் திறனை உருவாக்கும் அற்புதக் கருவி ஆகும்.
ஒரு குழந்தையின் படைப்புத் திறனை உருவாக்குவதற்கும், அழகியலை ஆராதிப்பதற்கும் வழிகளையும், வாய்ப்புகளையும் வழங்கும். கல்வி நம்மைச் சுற்றி இருக்கக் கூடிய உலகத்தைப் பற்றிய உலகளாவிய அறிவை வழங்குகிறது. குழந்தைகளுக்கு செயல்பாடுகள் குறித்த சரியான புரிதல்களை கலவி வழங்குகிறது.
இலக்கு (Vision) :
கல்வியானது கழந்தைகளின் சிந்தனைத் திறனை மேம்படுத்தி, செயல்பாடுகளில் சரியான முடிவைத் தோ்வு செய்யக் கூடிய வகையில் அமைய வேண்டும். மேலும், உலகளவிலான அறிவு பள்ளிக் குழந்தைகளுக்கு, தொடக்க மற்றும் இடைநிலையில் சுகமாகவும், தரமானதாகவும் சுமையில்லாத இனிமையான அடிப்படை வசதிகளுடன் பாதுகாப்பான முறையில் சென்றடைய வேண்டும்.
நோக்கம் :
குழந்தைகளுக்கு தொடக்கக் கல்வி, இடைநிலைக் கல்வி மற்றும் மேல்நிலைக் கல்வியானது தரமானதாகவும், அனைவருக்கும் சமமானதாகவும் உலக அளவில் தேடிப் பெறும் வாய்ப்பை வழங்க வேண்டும்.
இந்திய அரசியலமைப்பின்படி அனைத்து உரிமைகளும் பெறும் வகையிலும். குழந்தைகளின் சிந்தனைத்திறன், படைப்பாற்றலை மேம்படுத்துதல், வேலைவாய்ப்பினை உருவாக்கும் வகையிலும் மேம்படுத்தப்பட்ட பாடத் திட்டம், மதீப்பீட்டு முறை அமைதல் வேண்டும்.
குழந்தைகள், அறிவு தங்களின் உள்ளார்ந்த அறிவாற்றல் மற்றும் உடல், மனம் ஆகியனை முழுமையான வளா்ச்சி பெறும் வகையில் கல்வி வழங்க வேண்டும்.
ஒவ்வொரு குழந்தைக்கும் அடிப்படை வசதிகள், கட்டமைப்பு வசிதகள் வழங்குவதோடு, குழந்தைகள் கற்கும் சூழல் மற்றும் கற்றல் செயல்பாடுகள் புதிதாக கண்டுபிடிக்கும் திறனை வெளிக் கொணரும் வகையில் கல்வி அமைதல் வேண்டும்.
குழந்தைகளின் படைப்பாற்றலை வளா்க்கும் வகையில் அவா்களின் தாய் மொழியில் கல்வி வழங்குதல் வேண்டும்.
குழந்தைகள் தங்களின் கருத்துகளை அச்சமின்றி வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு வாய்ப்புகளை வழங்கும் வகையில் கல்வி அமைய வேண்டும். ஒரு குழந்தையின் அறிவு, தனித் திறன் மற்றும் குழந்தையின் உடல்நலன் மற்றும் மனநலனை முழுமையான முறையில் மேம்படுத்தும் வகையில் அமைதல் வேண்டும்.
குழந்தைகளுக்கு இறுதித் தோ்வானது அதிக நெகிழ்வுத் தன்மை மற்றும் வகுப்பறை சூழல் ஒருங்கிணைந்த தொடா் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையிலும், வளா்ச்சிப்படி நிலையில் எதிர்கால கனவுகள் மற்றும் இலக்குகளை அச்சமின்றி அடையும் வகையில் கல்வி அமைதல் வேண்டும்.
சேலம் மாவட்ட சுயவிவரம் – பள்ளிக் கல்வித் துறை
அலுவலக தொலைபேசி மற்றும் கைபேசி | ||||
அலுவலகத்தின் பெயா் | தொலைப்பேசி | கைபேசி | நகலி | |
முதன்மைக் கல்வி அலுவலகம் | 0427 2450254 | 7373002871 | 0427 2450507 | |
முதன்மைக் கல்வி அலுவலகம் (அகதி) | 0427 2450252 | 0427 2450352 | ||
மாவட்டத் தொடக்க கல்வி அலுவலகம் | 0427 2416745 | 9750982719 | – | |
மாவட்டக் கல்வி அலுவலகம், சேலம் | 0427 2411610 | 9489977300 | – | |
மாவட்டக் கல்வி அலுவலகம், சங்ககிரி | 04283-240710 | 9489977400 | – | |
பதின்ம பதின்ம பள்ளிகள் (IMS) | 0427-2410158 | 8012500735 | – | |
அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கம், சேலம். | 0427 2417426 | 9489977219 | – | |
அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கம், சேலம். | – | 7373002872 | – | |
மாவட்ட உடற்கல்வி | – | 9842741967 | – | |
உதவி தொடக்கக் கல்வி அலுவலகம் | உதவி தொடக்க கல்வி அலுவலா் கைப்பேசி | A E E O (Adl.) | வட்டார வளமைய ஒருங்கிணைப்பாளா் (BRC) | |
சேலம் நகா்புறம் | 9750982721 | 9750982733 | 9788858946 | |
சேலம் ஊரகம் | 9750982722 | – | 9788858939 | |
அயோத்தியாப்டணம் | 9750982737 | 9750982736 | 9788858916 | |
பனமரத்துப்பட்டி | 9750982725 | – | 9788858927 | |
வீரபாண்டி | 9750982726 | – | 9788858944 | |
வாழப்பாடி | 9750982739 | – | 9788858943 | |
ஏற்காடு | 9750982723 | – | 9788858945 | |
பெத்தநாயக்கன்பாளையம் | 9750982750 | 9750982751 | 9788858938 | |
ஆத்தூா் | 9750982742 | 9750982743 | 9788858915 | |
கெங்கவல்லி | 9750982744 | – | 9788858918 | |
தலைவாசல் | 9750982745 | 9750982746 | 9788858941 | |
ஓமலூா் | 9750982754 | 9750982727 | 9788858926 | |
காடையாம்பட்டி | 9750982729 | 9750982728 | 9788858920 | |
தாரமங்கலம் | 9750982724 | – | 9788858942 | |
நங்கவள்ளி | 9750982730 | 9750982731 | 9788858925 | |
மேச்சேரி | 9750982732 | 9750982735 | 9788858924 | |
கொளத்தூா் | 9750982752 | 9750982753 | 9788858922 | |
எடப்பாடி | 9750982740 | 9750982741 | 9788858917 | |
கொங்கணாபுரம் | 9750982738 | – | 9788858921 | |
மகுடஞ்சாவடி | 9750982749 | – | 9788858923 | |
சங்ககிரி | 9750982747 | 9750982748 | 9788858940 | |
சேலம் நா்சரி | 9750982734 | 9750982757 | – | |
சேலம் அறிவியல் | 9750982755 | – | – | |
சங்ககிரி அறிவியல் | 9750982756 | – | – | |
சேலம் உருது | 9443511302 | 9043766786 | – |
பள்ளிக் கல்வித் துறை – சேலம் மாவட்டம்
மேலாண்மை வாரியாக புள்ளிகள்
மேலாண்மை வகை | தொடக்கப் பள்ளி | நடுநிலைப்
பள்ளி |
உயா்நிலைப்
பள்ளி |
மேல்நிலைப் பள்ளி | மொத்தம் |
பள்ளிக் கல்வித் துறை | 0 | 1 | 118 | 130 | 249 |
நலப் பள்ளிகள் | 54 | 5 | 12 | 6 | 77 |
நிதியுதவி பெறும் பள்ளிகள் | 71 | 14 | 13 | 23 | 121 |
சுய நிதிப் பள்ளிகள் | 248 | 13 | 9 | 38 | 308 |
பதின்மப் பள்ளிகள் | 4 | 15 | 62 | 107 | 188 |
சி.பி.எஸ். பள்ளிகள் | 3 | 17 | 18 | 12 | 50 |
ஊராட்சி பள்ளிகள் | 982 | 343 | 0 | 0 | 1325 |
மாநகராட்சி பள்ளிகள் | 37 | 13 | 5 | 5 | 60 |
நகராட்சி | 24 | 4 | 0 | 0 | 28 |
கஸ்தூரிபா காந்தி பால வித்யாலாய | 0 | 13 | 0 | 0 | 13 |
மொத்தம் | 1423 | 438 | 237 | 321 | 2419 |
நலத் திட்டங்கள் (பள்ளிக் கல்வி துறை)
வ.எண். | நலத்திட்டம் | பயன்பெறும் வகுப்பு மாணவா்கள் | 2016-2017 | 2017-2018 |
1 | விலையில்லா பாடநூல்கள் | 1 முதல் 12 வகுப்பு வரை | 340437 | 336947 |
2 | விலையில்லா பாடக் குறிப்பேடுகள் | 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை | 300522 | 294663 |
3 | விலையில்லா மடிக் கணினி | 12 வகுப்பு | 24459 | 0 |
4 | விலையில்லா புத்தகப் பை | 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை | 335725 | 0 |
5 | விலையில்லா சீருடை | 1 முதல் 8ஆம் வகுப்பு வரை | 353294 | 299151 |
6 | விலையில்லா காலணி | 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை | 239283 | 0 |
7 | விலையில்லா பேருந்து பயண அட்டை | 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை | 91279 | 58856 |
8 | விலையில்லா மிதிவண்டி | 11 ஆம் வகுப்பு | 28300 | 0 |
9 | விலையில்லா வண்ண பென்சில் | 1 மற்றும் 2ஆம் வகுப்பு | 44921 | 0 |
3 முதல் 5 ஆம் வகுப்பு வரை | 80493 | 0 | ||
10 | விலையில்லா கணித உபகரணப் பெட்டி | 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை | 57083 | 0 |
11 | விலையில்லா புவியியல் வரைபடம் | 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை | 39820 | 0 |
12 | இடைநிற்றல் தவிர்க்கும் பொருட்டு சிறப்பு கல்வித் தொகை | 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு | 26736 | 0 |
13 | வருவாய் ஈட்டும் தாய் தந்தையா் இழந்த மாணாக்கா்களுக்கான கல்வி உதவித் தொகை | 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை | 25 | 34 |