Close

வேளாண்மைத் துறை

சேலம் மாவட்டத்தில் 30 விழுக்காடு மக்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களையே தங்கள் வாழ்வாதாரமாக்கொண்டுள்ளதால் , விவசாயமே மாவட்ட பொருளாதாரத்தின் மிக முக்கியமான பிரிவாக விளங்குகிறது. மாவட்டத்தில் உள்ள மொத்த பரப்பளவான 520530 ஹெக்டேரில் 220138 ஹெக்டேரை சாகுபடி பரப்பாகக் கொண்டுள்ளது. விவசாய உற்பத்தியில் நிலைத்தன்மையை உறுதி செய்யவும், மக்கள்தொகை வளர்ச்சிக்கேற்ப உற்பத்தியை உயர்த்தவும் தேவையான, அரசின் கொள்கைகளும் ,நோக்கங்களும் வகுக்கப்படுகின்றன. இதன் மூலம் விவாசாயம் சார்ந்த தொழிழகங்களின் மூலப்பொருள்கள் கிடைப்பது உறுதிசெய்யப்படுவதுடன், ஊரக மக்களுக்கு வேலைவாய்ப்பு வசதிகள் கிடைக்கப்பெறுகிறது.

இம்மாவட்ட விவசாயிகள் மாறிவரும் தொழில் நுட்பங்களை ஏற்றுக்கொள்வதிலும் பயன்படுத்துவதிலும் முன்னோடியாக விளங்குவதால், வேளான் உற்பத்தியில் சேலம் மாவட்டம் எப்போதுமே முன்னோடி மாவட்டங்களுள் ஓன்றாக விளங்குகிறது.

விவசாய உற்பத்தியை உயர்த்தவேண்டி பல வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தியும் , அதன் தொடர்புடைய தொழில்நுட்பங்களை விவசாயிகளிடம் கொண்டு சேர்த்தும் அதிக வளர்ச்சி விகிதத்தை அடைவதற்கான சவாலை விவசாயத்துறை திறமையாக எதிர் கொள்கிறது. விவசாயிகளுக்கு நல்ல வருவாயும், விவசாய பொருட்களுக்கு மதிப்பு கூட்டுதல் மூலம் அவர்களுடைய பொருளாதார நிலைமையை மேம்படுத்த, ஏற்கனவே உள்ள பயிர் சுழற்சி மற்றும் பயிர் பரவலாக்கல் தொழில் நுட்பங்களுடன், கூடுதலாக தீவிரமான ஒருங்கினைந்த வேளாண்மை-NMSA, பயனற்ற நில மேலாண்மை திட்டம், நீடித்த வறட்சி நில வேளாண்மை, கூட்டு பண்ணையம், விரிவான நீர்வடிநிலப்பகுதி வளர்ச்சி செயல்பாடுகள், நுன்நீர்பாசனம் மூலமாக நீர் மேலாண்மை, பசுமை உரங்கள், உயிர் உரங்கள் மூலம் மண் வளம் வளர்ச்சி, நீடித்த கரும்பு விவசாய வளர்ச்சி முன்னெடுப்புகள், இயற்கை உர வேளாண்மை, ஒருங்கினைந்த சத்து மேளாண்மை மேற்கொள்ளல்(INM) , ஒருங்கினைந்த பூச்சி மேலாண்மை(IPM), போன்ற தொழில் நுட்பங்கள், பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் அதிக முன்னுரிமை கொடுத்து செயல்படுத்தப்படுகிறது.

arrow image1விவசாயத்துறை pdficonimage(507 Kb)

 

arrow image1வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை pdficonimage(322 Kb)

 

arrow image1தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள்துறை pdficonimage(812 Kb)

 

arrow image1வேளாண்மைப் பொறியியல் துறை pdficonimage(418 Kb)

 

arrow image1

விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறை pdficonimage(413 Kb)