சேலம் மாவட்டம்
தமிழ்நாட்டில் சேலம் மாங்கனி நகரம் என்றழைக்கப்படுகிறது. குன்றுகளால் சூழப்பட்ட பகுதி என்ற பொருள் உள்ள சைலம் என்ற சொல்லிருந்து மருவி சேலம் என்று மாறியிருக்கலாம் எனக்கருதப்படுகிறது. தமிழ் பெண்பாற்புலவர் அவ்வையாரின் பிறப்பிடம் சேலமே என்று கருத்து பழங்காலத்திலிருந்து செவி வழி செய்தியாக தொடர்கிறது. கோயமுத்தூருடன் சேலமும் மதுரை நாயக்க மண்ணர்களின் ஆட்சிக்குட்பட்டிருந்தது. மதுரை-மைசூர் சண்டை எனச்சொல்லப்பட்ட சண்டைக்குபிறகு 18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் முகலாய மண்ணர் ஹைதர் அலியின் ஆளுகைக்குட்பட்டது. 1965 ஆண்டு சேலம் மாவட்டம் , சேலம் மற்றும் தருமபுரி என இரண்டாகப்பிரிக்கப்பட்டது. சேலம் ராமசாமி முதலியார், சி.விஜயராகவாச்சாரியார், பகதாளா நரசிம்மலூ, சி.ராஜகோபாலாச்சாரியார், டாக்டர் சுப்பராயன் போன்ற பல பிரபலமான அரசியல் தலைவர்கள் தங்கள் அரசியல் வாழ்கையை தொடங்கிய இடமாகும். தமிழ் சினிமாவின் ஆரம்ப காலங்களில் மிகப்பிரபலமாக இருந்த மார்டன் தியேட்டர்ஸ் இயங்கிய இடமாகும்.
சிறப்புகள்
குறிப்பிடத்தக்க சுற்றுலா தலமான ஏற்காடு மலையின் அடிவாரத்தில் சேலம் அமைந்துள்ளது. பாரம்பரியமான வெள்ளி கொலுசுகள் அதிக அளவில் தயாரிக்ப்படும் இடங்களுள் சேலம் ஒன்றாகும். மேலும் ஜவுளி உற்பத்தி, மாட்டுத்தீவணம் தயாரிப்பு, ஜவ்வரிசி உற்பத்தி தொழிகள் அதிகம் வளர்ந்துள்ளன. இந்தியாவில மேக்னஸைட் தாது அதிகம் கிடைக்கின்ற இடங்களில் சேலம் ஒன்றாகும். டால்மியா மேக்னஸைட், மற்றும் தமிழ்நாடு மேக்னஸைட் போன்ற ஆலைகளுக்கு இங்கே சுரங்கங்கள் உள்ளன.
சேலம் வந்து சேரும் பயன வழி
- வான்வழி: திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து சேலம் 135 கி.மீ. தொலைவில் உள்ளது. கோயம்புத்தூர் விமான நிலையம் 150 கி.மீ தொலைவில் உள்ளது.
- இரயில் வழி: சேலத்திலேயே இரயில் சந்திப்பு உள்ளது. மற்றும் இது கோட்ட தலைமையிடமாகும். 842 கி.மீ நீளமுள்ள இருப்பு பாதையை கொண்டுள்ளது சேலம் கோட்டம். தென்னிந்தியாவில் உள்ள முக்கியமான சந்திப்புகளில் ஒன்றாகும்.
- சாலை வழி: தேசிய நெடுஞ்சாலைகள் 7, 47 மற்றும் 68 ஆகியவை சந்திக்கும் இடமாகும். இரண்டு பெரிய பேருந்து நிலையங்களை கொண்டதாகும். டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலைத்திலிருந்த வெளியூர் பேருந்துகளும், பழைய பேருந்து நிலையத்திலிருந்து நகர பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
காணத்தக்க இடங்கள்
கோவில் மற்றும் மசூதிகள்
கந்தசாமி கோவில்:
சேலத்திலிருந்து திருச்செங்கோடு வழியில் 22 கி.மீ தொலைவில் உள்ளது சுந்தர கந்தாசாமி கோவில். மாவட்டத்திலுள்ள முக்கியமான 7 கோவில்களில் இதுவும் ஒன்றாகும். தை பூசம் உட்பட அனைத்து முருகக்கடவுள் விழாக்களும் மிக விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது
வழிபாட்டு நேரம்: காலை 6 மனி முதல் மாலை 8 மனி வரை
தொலைபேசி : 04288-287511
குமரகிரி முருகன் கோவில்:
சேலம் உடையாப்பட்டி புறவழிச்சாலையில் ஒரு சிறு குன்றின் மேல் அமைந்துள்ள அழகிய கோவிலாகும். சேலம் நகரத்திலிருந்து 6 கி.மீ தூரத்திலுள்ளது.
தொலைபேசி : 0427-2242789
1008 சிவலிங்கம் கோவில்:
சேலம் கோவை நெடுஞ்சாலையில் அரியானூர் அருகில் உள்ள சிறு குன்றில் விநாயகா குழுமத்தினரால் பராமரிக்கப்படும் இக்கோவிலில் 1008 சிவலிங்கங்கள் நந்தியுடன் அமைக்கப்பட்டுள்ளது.
வழிபாட்டு நேரம்:. காலை 7.30 முதல் மதியம் 12.30வரை மற்றும் மாலை 4 முதல் 8 வரை தொலைபேசி. 0427-3987000.
கோட்டை மாரியம்மன் கோவில்:
இந்த சேரநாட்டை சேர்ந்த சேர அரசனால் கட்டப்பட்ட பழமையான கோவிலாகும். இது நகரின் மத்தியிலேயே உள்ளது. இதன் தெய்வம் மலைமாரி என்று அழைக்கப்படுகிறது.
தொலைபேசி.0427-2267845
கந்தாஸ்ரமம்
சேலத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் உடையாப்பட்டி அருகே சிறிய குன்றின் மேல் சாந்தானந்த பிரமேந்திர சரஸ்வதி அவர்களால் நிர்மானிக்கப்பட்ட முருகன் கோவிலாகும். ஜருகுமலையின் வடக்கு பகுதி முடிவில் கன்னிமார் ஒடையின் கரையில் அமைந்துள்ளது.
தொலைபேசி .0427-2240660.
ஊத்துமலை சத்தியநாராயண சித்தர் பீடம்
இது சேலத்திலிருந்து 6 கி.மீ தொலைவில் சீலநாயக்கன்பட்டி அருகில் உள்ள ஊத்துமலையில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் வேறெங்குமில்லாத சிறப்புடன் இந்த சத்திய நாராயண கோவில் அமைந்துள்ளது.
நேரம் காலை 6 முதல் மதியம் 12 மற்றும் மதியம் 2 முதல் இரவு 8 .
தொலைபேசி.0427-2465477.
சித்தர் கோவில்:
பதினென் சித்தர்களில் ஒருவரான கலங்கானி சித்தரின் ஜீவசமாதி அமைந்துள்ள இடமான கஞ்சமலை மலைசரிவு பகுதியில் அமைந்துள்ளது இக்கோவில். இது சேலத்திலிருந்து இளம்பிள்ளை செல்லும் வழியில் 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
தொலைபேசி.0427-2491389.
அழகிரிநாதர் கோவில்:
சேலம் நகரத்தின் மையத்தில் அமைந்தள்ள இக்கோவில் கோட்டை பெருமாள் கோவில் என்றழைக்கப்படுகிறது. இங்கே
நேரம்:காலை 6 முதல் மதியம் 12 வரை & மாலை 5 முதல் இரவு 8 வரை
சுகவனேஸ்வரர் கோவில்:
சேலம் மாநகர மையத்தில் அமைந்துள்ள இந்த சிவன் கோவில் மிகப்பழமை வாய்ந்த ஒன்றாகும். இங்கே பல வறலாற்று நினைவுச்சின்னங்களையும், சிலைகளையும் கானலாம்.
நேரம் :காலை 6 முதல் மதியம் 12 வரை, மதியம் 3.30 முதல் இரவு 8.30 வரை
தொலைபேசி .0427-2450954.
உத்தமசோழபுரம் கரபுரநாதசுவாமி கோவில்:
உத்தமசோழரின் நகரம் என்றழைக்கப்பட்ட திருமணிமுத்தாறின் கரையில் உள்ள சிற்றுரான உத்தமசோழபுர்தில் அமைந்துள்ள மிகப்பழமையான சிவன் கோவிலாகும். இங்குள்ள சிவன் கரபுரநாதர் என்றழைக்கப்படுகிறார்
தொலைபேசி.0427-2221577
தான்தோன்றீஸ்வரர் கோவில்:
சேலத்திலிருந்து 35 கி.மீ தொலைவில் உள்ள பேலூரில் அமைந்துள்ள இக்கோவில் மிகப்பழமை வாய்ந்ததாகும். இங்குள்ள பல வகையான கற்சிற்பங்கள் புகழ்வாய்ந்தவயாகும்.
தொலைபேசி.04292-241400.
அப்பா பைத்தியசாமி கோவில்:
1859 கரூரில் ஜமீன் பரம்பரையில் பிறந்த அப்பா பைத்தியசாமி என்பவர் முக்தி பெற்று சமாதி அடைந்த இடத்தில் கட்டப்பட்ட கோவிலாகும். தை மாதம் அஸ்வினி திதியில் வரும் அவருடைய குருபூஜைக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இங்கே வழிபடுவார்கள். இது சேலம் இரயில் நிலையத்திலிருந்து ஒரு கி.மீ தூரத்தில் உள்ளது.
நேரம்.காலை 5.30 முதல் மதியம் 12 வரை , மாலை 5.30 முதல் இரவு 8.30 வரை
ஆறகலூர் :
ஆறகலூர் மிகப்பழங்காலத்திலேயே புகழ் பெற்ற ஆன்மீகத்தளமாக விளங்கியுள்ளது. பழங்காலத்திலேயே இவ்வூருக்கும் ஆன்மீக தலைநகரமாக விளங்கிய காஞ்சிக்கும் தொடர்புகள் இருந்துள்ளன. இங்கு இரண்டு சமயங்களான சைவம் மற்றும் வைணவத்திற்குரிய கோவில்களாக காமநாதீஸ்வரர் கோவில் மற்றும் கரிவரதபெருமாள் கோவில்கள் உள்ளன. இங்குள்ள காமநாதீஸ்வரர் கோவிலில் எட்டு பைரவர் சன்னதிகள் உள்ளன. இங்கே பைரவருக்கு நடைபெறும் தேய்பிறை அஸ்டமி பூஜை பல்லாயிரகணக்கான மக்கள் வந்து வழிபடும் விழாவாகும். இதற்காக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
இந்த ஊருக்கு அருகாமையில் உள்ள தியாகனூர் என்ற கிராமத்தில் ஒரே கல்லாலான மிகப்பெரிய புத்தர் சிலை உள்ளது. தொலைபேசி.04582-260107.
அயோத்தியாபட்டணம் கோதண்டராமர் கோவில்:
சேலத்திற்கு அருகில் 10 கி.மீ. தொலைவில் உள்ள அயோத்தியாபட்டிணத்தில் அமைந்துள்ள இக்கோவில் சேலம் மாவட்டத்தில் உள்ள புராதனமான கோவில்களுள் ஒன்றாகும். இது ஒரு அழகான விஷ்னு கோவிலாகும். தெய்வம் கோதண்டராமர் என்றழைக்கப்படுகிறார்.
நேரம் :காலை 7 முதல் மதியம் 12வரை , மாலை4 முதல் இரவு 8 வரை
. தொலைபேசி .0427-2253500, 8098127383.
மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவில்
சேலதிலிருந்த 33 கி.மீ தொலைவிலும் மேட்டூரிலிருந்து 20 கி.மீ. தொலைவிலும் உள்ள பேரூராட்சியான மேச்சேரியிலும் காளியம்மன் கோவிலாகும்.
நேரம். காலை 6 முதல் இரவு 8 வரை தொலைபேசி. 04298-278133
ஜம்மா மசூதி:
சேலம் நகரத்தின் மையத்தில் திருமணிமுத்தாற்றின் தெற்கு கரையில் அமைந்துள்ள ஜம்மா மசூதியாகும் மிகப்பழமையானதாகவும், மைசூர் அரசர் திப்புசுல்தான் அவர்களால் கட்டப்பட்டதாகும். அவர் இங்கு வழிபாடுகள் நடத்தியும் உள்ளார் என அறியப்படுகிறது.
நேரம் : காலை 9.30 முதல் மாலை 6 வரை தொலைபேசி.0427-2267227.
தாரமங்கலம் கைலாசநாதர் கோவில்
சேலத்திலிருந்து 30 கி.மீ. தொலைவில உள்ள ஒரு பேருராட்சி தாரமங்கலம். இங்கு அமைந்துள்ள கைலாசநாதர் கோவில் பழைவாய்ந்த கோவிலாகும். ரதி மன்மதனுக்கு இங்கு சிலைகள் உள்ளது. இக்கோவில் கற்சிற்பங்கள் மிக பிரசித்தி பெற்றதாகும்.
நேரம் காலை 7.30 முதல் மதியம் 1 வரை ம்லை 4 முதல் இரவு 8 வரை
தொலைபேசி .04290-252100.
நிகழ்வுகள் மற்றும் பண்டிகைகள்:
கோட்டை மாரியம்மன் திருவிழா:
ஜுலை-ஆகஸ்ட் மாதங்களில் (தமிழ் ஆடி மாதம் ) தமிழ்நாட்டில் மாரியம்மன் திருவிழாக்கள் பரவலாக நடைபெறும். சேலத்தில் ஒரு வாரகாலமாக நடைபெறும் கோட்டை மாரியம்மன் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகவும் பெருவாரியான மக்களால் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
.
மலையாளி கோவில் விழா:
ஏற்காட்டிலில் உள்ள சேர்வராயன் காவேரியம்மன் கோவிலில் வருடாந்திரம் மே மாதத்தில் கொண்டாடப்படும் விழாவானது மிகவும் பிரசித்தி பெற்றதாகவும் ஆயிரக்கணக்கான மலையாளிகள் கலந்துகொள்ளும் சிறப்பான பண்டிகையாகவம் விளங்குகிறது.
ஆடிப்பெருக்கு விழா:
ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட்(ஆடி) மாதத்தில் ஆடிப்பெருக்கு விழா மேட்டூரிலும், கவேரி நதிக்கரை ஓரங்களிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது
ஏற்காடு கோடை விழா:
ஒவ்வொரு வருடமும் மே மாதம் கடைசி வாரம் ஏற்காட்டில் கொண்டாடப்படும் கோடை விழா ஒரு முக்கியமான விழாவாகும். இதில் நடைபெறும் , மலர் கண்காட்சி, நாய் கண்காட்சி, படகு போட்டி போன்றவற்றில் உள்ளூர் மற்றும் வெளியூர் பார்வையாளர்கள் பங்கெடுத்துகொள்வார்கள். மேலும் தினசரி நடைபெறும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள், நாடகங்கள் பெருவாரியான மக்களை ஈர்க்கும் போழுதுபோக்கு நிகழ்ச்சிகளாகும்.
ஏற்காடு:
ஏற்காடு சேலத்திற்கு அருகாமையில் கிழக்கு தொடர்ச்சி மலை சேர்வராயன் மலைத்தொடரில் உள்ள மலைத்தளமாகும். இது கடல் மட்டத்திலிருந்து 1515 மீட்டர்-4969 அடி உயர்த்தில் உள்ளது. இதன் பரப்பளவு 382.67 ச.கிமீ. ஏற்காடு, ஊராட்சி ஒன்றியத்தை உள்ளடக்கியதாகவும் வட்டத் தலைமையிடமாகவும் உள்ளது. மிகவும் சிக்கனமான மலைவாச தலமாகும். எனவே இது ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படுகிறது.
சேரும்வழி:
- வான்வழி: அருகிலுள்ள விமான நிலையம் –பெங்களூரு 250 கிமீ , கோயம்புத்தூர் – 190 கி.மீ .
- இரயில் : சேலம் இரயில் சந்திப்பு (35 கி.மி)
- பேருந்து : சேலத்திலிருந்து ஏற்காட்டுக்கு உடனக்குடன் பேருந்து வசதி உள்ளது. சேலம் பேருந்து நிலையத்திலிருந்து சென்னை,மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி,திருவண்ணாமலை, கோயம்புத்தூர், புதச்சேரி, திருப்பதி போன்ற அனைத்து நகரங்களுக்கும் பேருந்து வசதியுள்ளது,
பெரிய ஏரி:
இங்க அமைந்துள்ள இயற்கையான ஏரி மிகப்பெரிதானதாகும். இதைச்சுற்றிலும், மான்பூங்கா, பொழுதுபோக்கு பூங்கா, அண்ணாபூங்கா, ஹோட்டல் தமிழ்நாடு பொன்றவைகளால் சூழப்பட்டுள்ளது. படகு சவாரி மிக ரம்மியமானதாகும்.
படகுசவாரி நேரம். காலை 9 முதல் மாலை 5.30 வரை.
கட்டணம். 8நபர்களுக்கு–ரூ.320 4நபர்களுக்கு–ரூ.110 2நபர்களுக்கு –ரூ.80
தொலைபேசி.04281-222273
அண்ணா பூங்கா:
அண்ணா பூங்கா ஏரிக்கு அருகாமையில் அமைந்துள்ளது. இதில் கொடைவிழாவின் போது மலர்கண்காட்சி நடைபெறும். இதனுள்ளே உள்ள ஜப்பானிய பூங்கா கண்டிப்பாக கானவேண்டிய ஒன்றாகும். நுழைவு கட்டணம்.
பெரியவருக்கு ரூ.15 , குழந்தைகளுக்கு ரூ.10 வீடியோ கேமரா ரூ.50 கேமரா.ரூ.25 .தொலைபேசி .04281-222126
தோட்டக்கலைதுறை பண்ணை
பல்வேறு தாவரங்களின் கன்றுகள் இங்கு கிடைக்கின்றன. நுழைவு கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.30/- கேமரா ரூ.50/-
தாவரவியல் பூங்கா:
இந்திய தாவரவியல் கழகத்தால் பராமரிக்கப்படுகின்ற தாவரவியல் பூங்கா அதிக தாவரங்களின் தொகுப்புடன் உள்ளது. இங்கு மணிப்பாறையில் கல்லால் மோதினால் மணிச்சத்தம் கேட்கும்.
கிள்ளியூர் நீர்வீழ்ச்சி:
ஏற்காட்டிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது கிள்ளியூர் நீர்வீழ்ச்சி ஏரியிலிருந்து வழிந்தோடும் நீர் இங்கு நீர்வீழ்ச்சியாக விழுகிறது.
தொலைபேசி..0427-2416449.
லேடிஸ் சீட், ஜென்ஸ், சில்ரன்ஸ் சீட்
இங்கு பாறைகள் இயற்கையாகவே காட்ச்சித்தளங்களாக அமைந்துள்ளது. இங்கிருந்து சேலம் நகரத்தின் அழகை கண்டுகளிக்கலாம்.
சேர்வராயன் கோவில்:
இது ஒரு பெருமாள் குகைக்கோவிலாகும். மே மாத்த்தில் இங்கு நடைபெறும் திருவிழா மிக வண்ணமயமானதாகவும் ஆயிரகணக்கான மலைவாழ் மக்கள் கொண்டாடுவதாகவும் உள்ளது.
நேரம் காலை. 6 முதல் இரவு 8 வரை தொலைபேசி.0427-2267845.
பகோடா காட்சி முனை:
ஏற்காட்டின் கிழக்கு முனையில்அமைந்துள்ள இந்த காட்சிமுனை பிரமிட் பாய்ன்ட் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு ராமர் கோவில் ஒன்றுள்ளது. இங்கிருந்து அயோத்தியாபட்டணம் பகுதிகளை கண்டுகளிக்கலாம். இது ஏற்காட்டிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது.
ராஜ ராஜேஸ்வரி கோவில்:
இது ஏற்காட்டிலிருந்து சேர்வராயன் கோவில் வழித்தடத்தில் 4 கி.மீ தொலைவில் உள்ளது. இது தெய்வங்களின் தெய்வமென போற்றப்படுகிறது.
நேரம் காலை 7 முதல் மதியம் 12 வரை , மாலை 4 முத்ல இரவு 7வரை
தொலைபேசி.04281-222354.
பட்டு பண்ணை, ரோஜா தோட்டம்
இங்குள்ள பட்டு பண்ணையில் மெல்பெரி செடிகள் பெருவாரியாக வளர்க்கப்படுகிறது. இங்கு பட்டு பூச்சி வளர்ப்பையும், அதிலிருந்து பட்டு நூல் தயாரிப்பையும் கானலாம். இங்குள்ள ரோஜா தோட்டத்தல் பல வண்ண ரோஜா மலர்கள் வளர்க்கப்படுகின்றன. இங்கு ரோஜா நாற்றுக்கள் விற்பனை செய்யப்படுகிறது. இது ஏற்காட்டிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது.
சுற்றுலா பற்றிய மேலதிக விவரங்களுக்கு பின்வரும் முகவரியை தொடர்பு கொள்ளலாம்
சுற்றலா அலுவலர்
சுற்றுலா அலுவலகம்
எண்.217, 2வது தளம்,
மாவட்ட ஆட்சியர் அலுவழகம்
சேலம் – 636001
தொலைபேசி எண், 0427-2416449